பாட்டியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பேறன்

209

ஹரியானா மாநிலம் பெடகாபாத் நகரைச் சேர்ந்த மூதாட்டி ரமாதேவி (70வயது). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரமாதேவியின் பேரன் விக்கி . இவர் புதிதாக பிறந்த மகனுக்கு பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் ரமாதேவி பங்கேற்கவில்லை.

இதனால் தனது பாட்டி பங்கேற்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்து விக்கி, நேராக பாட்டி ரமாதேவியின் வீட்டுக்கு சென்று அவரிடம் சண்டை போட்டுள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்கி, இரும்பு கம்பியை பாட்டியின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதனால் மயங்கி விழுந்த ரமாதேவியை அவரது கணவர் ராம் அவ்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே ரமாதேவி உயிரிழந்தார். இந்நிலையில் ரமாதேவியின் கணவர் ராம் அவ்தார் அளித்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of