பொள்ளாச்சி விவகாரம், சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க அனுமதி

92

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இன்னமும் தீவிர நடவடிக்கையும், கடும் தண்டனையும் வேண்டும் என்பதுதான் பொதுவான விருப்பமாக இன்று தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை தரவும், இந்த சம்பவத்தை கண்டித்தும், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் இடம்பெற்ற பிளக்ஸ் பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின்போது, பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், ஆவேசமாக பறையை அடித்து பாட்டு பாடினார்கள்.

இந்நிலையில் தற்போது திருநாவுக்கரசை போலிஸ் காவலில் எடுக்க சி.பி.சி.ஐ.டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நனடந்துமுடிந்துள்ள நிலையில் திருநாவுக்கரசை நான்கு நாட்களுக்கு சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது