“3 ஆயிரம் கி.மீ.. அதுவும் சைக்கிளிலேயே..” வியக்க வைத்த மாணவர்..

541

கொரோனா அச்சுறுத்தலால், உலகம் முழுவதும் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் பகுதியில் படித்து வந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், சைக்கிளில் 3 ஆயிரத்து 218 கி.மீ. தூரம் பயணித்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

அவரது வீடு, கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ளது. நாடு கடந்து தனது சொந்த ஊருக்கு சைக்கிளிலேயே செல்ல முடிவு செய்த மாணவன் ஆங்காங்கே தங்கிக்கொள்வதற்கு தற்காலிக கூடாரம், உணவு பொருட்களையும் எடுத்துக்கொண்டு தனது பயணத்தைத் தொடங்கினார்.

சுமார் 7 வார கால பயணத்துக்குப் பிறகு தன்னுடைய வீட்டை அடைந்திருக்கிறார். உதாரணமாக இந்த பயணமானது சென்னையில் இருந்து லடாக் வரையிலான தொலைவுக்கு பயணம் செய்வதற்கு இணையானது  என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of