நீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதா?

827

நீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பசுமைவழிச்சாலை திட்டம் குறித்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பசுமை வழிச்சாலை குறித்த தகவல்கள் இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் வர வேண்டாம் என்றும், வழக்கு விசாரணைக்கு ஆஜராக அரசு வழக்கறிஞர்களை பத்திரிகை வைத்து அழைக்க வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனரில் அரசு வழக்கறிஞரின் பெயர் இடம் பெற்றிருப்பதை ஏற்க முடியாது என்றும்,நீதிமன்ற உத்தரவுகளை அரசு வழக்கறிஞரே மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை முழுவதும் வைக்கப்பட்ட பேனரில் அரசு வழக்கறிஞர் பெயர் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பேனர்களில் புகைப்படம் வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என எச்சரித்தனர்.

அரசு வழக்கறிஞர்களுக்கு என ஒரு மரியாதை உள்ளது என்றும், அதனை அரசு நீதிபதிகள் பின்பற்ற வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், 8 வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் புதிய மரங்கள் நடப்பட்டனவா என்றும், மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of