அமெரிக்க அதிபர் போட்ட டுவீட்..! – கலாய்த்து பதிலடி கொடுத்த கிரேட்டா தன்பர்க்..!

708

சமீபத்தில் காலநிலை தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை எச்சரித்த கிரேட்டா தன்பர்க் என்ற சிறுமியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

‘HOW DARE YOU’ என்ற வார்த்தையின் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அந்த சிறுமி, அமெரிக்க அதிபரின் டுவீட்டை கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

காலநிலைத் தொடர்பாக உலகின் முக்கியத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரேட்டா தன்பெர்க்கின் கோரிக்கை.

ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராட்டம், மாணவர்களுக்குக் காலநிலை குறித்த விழிப்புணர்வு வழங்குதல், சூழலியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுதல் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், கிரேட்டா. டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

உலக நாடுகளின் தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்யக்கூடியவர் கிரேட்டா. இதுதொடர்பாக, டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “மிகவும் கேலிக்குரியது. கிரேட்டா தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். தனது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். Chill கிரேட்டா, Chill!” என்று கிரேட்டாவின் கோபத்தை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.

கிரேட்டா தன்பெர்க் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பயோவில், “கோபத்தைக் கட்டுப்படுத்த முயலும் இளம்பெண். தற்போது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறேன்” என்று மாற்றியுள்ளார்.

“என் மீது அவ்வப்போது அரசியல் சாயம் பூசுகிறார்கள். ஆனால் நான் எந்தவொரு கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ, சித்தாந்தத்திற்கோ ஆதரவாகப் பேசியதே இல்லை. நான் அறிவியலையும், நாம் எதுவும் செய்யாமல் விட்டால் நடக்கப்போகும் ஆபத்துகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

அது மட்டுமல்லாது, இன்றைக்குத் தேவைப்படும் அரசியல் வலதிலும் சரி, இடதிலும் சரி, நடுநிலையான நிலைப்பாட்டிலும் சரி… இல்லவே இல்லை!” என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் அரசியல் குறித்த விமர்சனத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of