அரை மணி நேரத்திற்கு முன் தூக்கில் தொங்கிய மணமகன்…! – அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

778

ஹைதராபாத் : திருமணத்திற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில் மணமகன் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொம்பல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். மென்பொறியாளராக பணியாற்றி வந்த இவருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மணவறையில் முகஒப்பனை செய்துக்கொள்வதற்காக சந்தீப் இருந்துள்ளார். அவரை அழைக்க உறவினர்கள் சென்றபொழுது நீண்ட நேரமாகியும் அவர்  கதவை திறக்கவில்லை. இதனால் பதரிப்போன உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அங்கு சந்தீப் பிணமாக தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சந்தீப் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of