குரூப் 4 தேர்வில் ஏற்பட்ட இந்த தவறு கண்டனத்துக்குரியது

347

குரூப் 4 தேர்வில், குடியரசு தினம் குறித்த கேள்விக்கு தவறான விடைகள் அச்சிடப்பட்டிருந்தது, கண்டனத்திற்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான முதலீடு அதிகரிக்கும் என கூறினார்.  முதல்வரின் பயணம் நன்மை பயக்கும் என நினைப்பவர்கள் அவரது பயணத்தை விமர்சிக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்று நடைபெற்ற குரூப்-4 தேர்வில் குடியரசு தினம் குறித்த கேள்விக்கு தவறாக பதில் அச்சிடப்பட்டிருந்தது, கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டார். மேலும், ப.சிதம்பரம் விவகாரத்தில் சிபிஐ தனது கடமையை செய்து வருகிறது என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of