விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- D2 ராக்கெட்

583

தகவல் தொடர்புக்காக தயாரிக்கப்பட்ட ஜிசாட் செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- D2 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனான இஸ்ரோ, உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிசாட்-29 செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. 3,423 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 D2 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து மாலை 5.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது. கஜா புயல் திசைமாறி கடலூர்- பாம்பன் இடையே கரையைக் கடப்பதால், ராக்கெட்டை திட்டமிட்டபடி ஏவப்பட்டது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 10 டன் அளவுக்கு அதிக எடைகொண்ட செயற்கைக்கோளையும் இனி விண்ணில் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement