19 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! தேர்தல் ஆணையம் அனுமதி!

90

நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலுக்காக ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை சீராக நடத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது.

அந்தவகையில் இந்த கவுன்சிலின் 34-வது கூட்டம் வருகிற 19-ந்தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருகிற கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டி இருந்தது.

எனவே இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுமதி வழகியுள்ளது.