ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட 23 பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி, உள்ளிட்டவைகளுக்கு வரி விகிதம் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதன் மூலம் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும்,18 சதவீதத்தில் இருந்த வரிகள் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்களின் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.