மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரி – டி.கே.ரங்கராஜன்

437

முன்னெப்போதும் இல்லாத வகையாக மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குற்றம்சாட்டியுள்ளார் திருப்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் 3வது மாநில மாநாட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலங்களைவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டு பேசினார், நம் நாட்டில் அரசு பினாமியாக இருந்து வருவதாகவும், உச்ச நீதிமன்றமோ நடிகை கண் அடித்ததை 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரனை நடத்தும் அளவில் இருப்பதால் மக்கள் உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையை இழந்து வருவதாக தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையாக மாற்றுத்திறனாளிகளின் வாகணங்களுக்கும், உபகரணங்களுக்கும் கூட இரக்கமில்லாமல் ஜி.எஸ்.டி வரியினை விதித்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of