“காங்கிரஸ் புதிய செயல் தலைவர் நியமனம்” – சோனியா அதிரடி முடிவு

447

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில், நேற்று அக்கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி குஜராத், மணிப்பூர் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் பிரிவுகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ஹர்திக் பட்டேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அமித் சாவ்டா உள்ள நிலையில், ஹர்திக் பட்டேல் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினர் நடத்திய, பல்வேறு போராட்டங்களை, ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of