குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை! இன்று தீர்ப்பு!

111

குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக, சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர். அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாணையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு வழங்கப்படுகிறது. தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of