இலங்கையில் பதற்றம் – வாக்காளர்களை நோக்கி பாய்ந்த தோட்டாக்கள்..!

419

இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

இந்த தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்சேவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசாவும் போட்டியிடுகின்றனர். இவா்களைத் தவிர இந்தத் தோதலில் 35 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர். மேலும், இந்த தேர்தலில் 1.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் மன்னார் பகுதியில் வாக்காளர்களை ஏற்றி வந்த 2 பேருந்துகள் மீது கற்கள் வீசயும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதல் நடந்தது. நல்வாய்ப்பாக அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of