ராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி! ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்!

1703

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருலட்சுமி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தம்பி வெங்கடேசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நாளிலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன பிறகு, குருலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காரணம், அவரது மகன் குரு சூரியாவுக்கு வித்தியாசமான நோய் தாக்கியதே. திடீரென்று குருசூரியா நடக்க முடியாமல் ஆனார். ஓரிரு வருடங்களில் பேசவும் முடியவில்லை. அதன் பிறகு சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது.செல்போன் ரிங்க் அடித்தால் கூட அவரால் தாங்க முடியாதாம்.

இந்நிலையில் குருலட்சுமியின் கணவர் விவாகரத்து வழக்கு தொடர்ந்ததில் அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோசமும் முற்றிலும் நொருங்கி போனது. என்ன செய்வது ஏது செய்வது என்று கிடந்து அவரிடம், ஊரிலிருந்த ஒருவர் ராகவா லாரன்சை பாருங்கள் அவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று கூறியுள்ளார்.

அவரின் பேச்சைக் கேட்டு சென்னைக்கு தனது மகன் மற்றும் தம்பி வெங்கடேசன் உடன் வந்த குருலட்சுமி, எழும்பூர் ரயில்வே நிலையத்தில் உண்ண உணவின்றி தவிர்த்து வருகின்றார். லாரன்சின் முகவரியை கண்டு பிடிக்க முடியாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அக்காவின் இந்த நிலையின் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் வெங்கடேசனை பார்க்கும் போது, திரைக்காவியமான பாசமலர்கள் திரைப்படம் கண்முன் வந்து போகிறது.

இவர்களின் இந்த நிலைமையை அறிந்து நடிகர் லாரண்ஸ் இவர்களுக்கு உதவி செய்வாரா, அவருக்கு இந்த செய்தி சென்றடையுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.