23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்

533

சேலத்தில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை சோதனை செய்தனர். அதில் 150 மூட்டைகளில் 4 ஆயிரத்து 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 23 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Advertisement