செல்பி மோகத்தால் தொடரும் உயிரிழப்புகள் | Darjeeling Toy Train

320

டார்ஜிலிங்கின் பொம்மை ரயில் எனப்படும் சிறிய வகை, பொழுதுபோக்கு மலை ரயில் சேவை அங்கு மிகவும் பிரபலம். எஞ்சின் பெட்டியை தவிர்த்து இருபெட்டிகளை மட்டுமே உடைய இந்த பொம்மை ரெயிலில் பயணம் செய்ய அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் அந்த பகுதிக்கு வருகை தருவது வழக்கம். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிரதிப் சக்சேனா தனது குடும்பத்துடன் டார்ஜிலிங் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். பிரதிப் தனது குடும்பத்துடன் நேற்று பொம்மை ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

படாசியா வளைவு பகுதியில் ரெயில் செல்லும் போது பிரதிப் வாயில் கதவு அருகே வந்து செல்பி எடுக்க முயன்றுள்ளார். ரெயிலில் பயணம் செய்தவர்களும் ரெயில்வே ஊழியர்களும் அவரை எச்சரித்தனர். அதையும் மீறி செல்பி எடுத்துள்ளார். அப்போது வளைவுப் பகுதியில் ரெயில் திரும்பும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக சிலிகுரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அனால் மருத்துவமைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of