எனக்கு ‘காதலிக்க யாருமில்லை’.., ஜி.வி பிரிகாஷ்

172

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘சர்வம் தாளமயம்’ படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் ‘குப்பத்து ராஜா’ வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதியும், ‘வாட்ச்மேன்’ ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து, 100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4ஜி உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் தற்போது காதலை தேடி நித்யா நந்தா, ரெட்டை கொம்பு, கமல் பிரகாஷ் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதில் கமல் பிரகாஷ் இயக்கும் படத்திற்கு `காதலிக்க யாருமில்லை’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். திகில் கலந்த பேண்டஸி காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். சிவா படத்தொகுப்பையும், கமலநாதன் கலை பணிகளையும், டான் அசோக் சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார்.