சாத்திய கூறுகள் இருந்தால் ஹெச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் கைது செய்யப்படுவார்கள்

930

சாத்திய கூறுகள் இருந்தால் ஹெச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் கைது செய்யப்படுவார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் நான்கு ஆண்டுகளுக்கு சாரல் விழா நடைபெறுகிறது. விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து பேசிய அவர், எந்த ஒரு தனிநபரும் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றி இழிவாக பேசக்கூடாது என்றும் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சாத்திய கூறுகள் இருந்தால் ஹெச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் கைது செய்யப்படுவார்கள் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of