சூர்யாவின் கருத்துக்கு ரஜினி ஆதரவு..! – எச்.ராஜா என்ன சொன்னார் தெரியுமா?

497

புதிய கல்வி கொள்கையில், யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுவதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசன் சார்பாக நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைத்துறை இயக்குநர்கள் பலர் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கையில், யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுவதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்வி கொள்கை குறித்து திராவிட கழகங்களும் அதனை சார்ந்துள்ள பல இயக்கங்களும் பொய்யான கருத்துக்களை கூறி வருவதாக குற்றம் சாட்டினார்.

சூர்யாவின் புதிய கல்வி கொள்கை குறித்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்த ரஜினியின் பேச்சு குறித்த கேள்விக்கு தனிப்பட்ட நபர்களின் கருத்து குறித்து தான் எதுவும் கூற விரும்பவில்லை என மறுத்துவிட்டார். புதிய கல்வி கொள்கை குறித்து வேண்டுமென்ற தவறான கருத்துக்களை பரவ செய்து தேர்தல் ஆதாயம் தேட நினைப்பதாகவும் ஹெச். ராஜா குற்றம் சாட்டினார்.