நடிகர் சூர்யாவுக்கு எச்.ராஜா கண்டனம்

351

உசிலம்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரையறை 400 பக்கம் உள்ளது. இதில் 4 பக்கத்தை முதலில் அவர் படிக்க வேண்டும்.அப்புறம் கருத்து தெரிவிக்கட்டும். தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்பமொழி என்றுதான் உள்ளது. இதில் எங்கு இந்தி திணிக்கப்படுகிறது.

கனிமொழி இந்தி படிக்கும்போது ஏழை கருப்பன், சுப்பன் மகன் இந்தி படிக்க கூடாதா? இந்தி படிக்க கூடாது என கூறும் தி.மு.க.வினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் எதிர்ப்பதற்கு காரணம் ஏழைகளுக்கு நலன் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான்.  என்று அவர் பேசினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of