நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச்.ராஜா

345
H.Raja

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அனுமதிக்கப்பட்டாத இடத்தில் மேடை அமைப்பது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்து தரகுறைவான வார்த்தைகளால் பேசினார். எச்.ராஜா பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

இதையடுத்து நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் தாமாக முன்வத்து ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி, அக்டோபர் 22 ஆம் தேதிக்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, ஹெச்.ராஜாவிற்கு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார்.

அப்போது, தான் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் எச்.ராஜா தெரிவித்தார். மேலும் தனது தவறை உணர்ந்து விட்டதாகவும் எச்.ராஜா நீதிபதிகளிடம் கூறினார்.

எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.