ஹெச்.ராஜா எம்.எல்.ஏ கிடையாது, என்பதாலே அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை

753
H-raja-kadampur-raj

ஹெச்.ராஜா எம்.எல்.ஏ கிடையாது என்பதால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது என்பதாலே அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்எல்ஏ-வாக இருந்து கொண்டு, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் விதமாக பேசியதால் தான், கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்தாக கூறினார்.

எச்.ராஜா எம்எல்ஏ கிடையாது என்பதால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது என்பதாலே நடவடிக்கையை அரசு கையில் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.