வடதுருவமும், தென்துருவமும் ஒரே இடத்தில்..! ஸ்டாலினை சந்தித்த எச்.ராஜா..! பலே காரணம்..?

452

திமுகவின் தலைவர் ஸ்டாலினும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் அரசியலில் வடதுருவரும், தென்துருவம் போன்றவர்கள். இவர்களிடையே அடிக்கடி, வார்த்தைப்போர் நிகழ்வது ஒரு சாதாரணமான நிகழ்வு.

இவ்வாறு இருக்க, எச்.ராஜா, ஸ்டாலினை சந்திக்க தி.மு.க., தலைமையகமான அறிவாலயம் சென்றிருக்கிறார்.

எதற்காக இந்த சந்திப்பு, என்ன காரணமாக இருக்கும் என்று திமுகவினர் ஆவலாக இருந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அது என்னவென்றால், எச்.ராஜாவின் இளைய மகள் சிந்துஜாவிற்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம். இந்த திருமண விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கவே, எச்.ராஜா வந்திருக்கிறாராம்.

மேலும், இருவரும் சந்தித்தப்போது, அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of