இவர் பேசுவது நாகரீகத்தின் உச்சம்! திருமாவை வறுத்தெடுத்த ஹெச்.ராஜா!

1037

நடிகர் கமல்ஹாசனின் சர்ச்சைப் பேச்சுக்காக அவர் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரச்சாரத்தில் பங்கேற்ற கமல் மீது, முட்டை, செருப்பு, கற்கள் வீசப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில்,

“நடிகர் கமல்ஹாசன் கூட்டத்தில் காலணி, முட்டை வீச்சு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

தமிழக அரசியல் அநாகரிகத்தின் களமாக மாறிவருவது கவலையளிக்கிறது. சங்பரிவார் கும்பலின் கொட்டத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பாகும்.

இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.”

என்று பதிவிட்டிருந்தார்.

திருமாவளவனின் டிவிட்டுக்கு எதிர் டுவீட் போட்ட எச் ராஜா,

“ஆமாம் இவர் ரொம்ப நாகரீகமானவர். இவரோட சரக்கு மிடுக்கு பேச்சு ஆஹா நாகரீகத்தின் உச்சம்.”

என்று பதிவிட்டிருந்தார்.

ஏற்கனவே திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கூட்டத்தில் சரக்கு, மிடுக்கு என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு வீடியோவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement