25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன் – கண்கலங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்

851

“Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற புத்தகம் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் என்னுடைய அப்பா என் 9-வது வயதில் இறந்துபோனார்.

ar rahman cried

அதன்பின் வெறுமையே மிஞ்சியிருந்தது. என்னென்மோ நடந்தது. நாங்கள் நன்றாக இல்லை என்பதை தெளிவாக உணர முடிந்தது. 25 வயது வரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே இருந்தேன். அந்த வாழ்க்கை முறை தான் எனக்கு மிகந்த தைரியத்தையும் கொடுத்தது.

‘பஞ்சதன் ரெக்கார்ட் இன்’ என்ற ரெக்கார்டிங் ஸ்டூடியோவை கட்டியபிறகுதான் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கு முன் செயலற்றுதான் இருந்தேன். என் தந்தையின் இழப்பு காரணமாக என்னால் அதிக படங்கள் பண்ண முடியவில்லை.

35 படங்கள் எனக்குக் கிடைத்தபோது, நான் 2 படங்களுக்குத்தான் இசையமைத்தேன். நீ எப்படி இந்தத் துறையில் பிழைக்கப்போகிறாய் எனப் பலரும் ஆச்சர்யப்பட்டு கேட்டனர். உன்னிடம் எல்லாம் உள்ளது; அதைப் பற்றிக்கொள் என்றனர்.Notes-of-a-Dream

அப்போது, எனக்கு 25 வயது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. எனது 12 முதல் 22 வயதில் நான் அனைத்தையும் செய்து முடித்திருந்தேன்.

‘ரோஜா’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கும் முன்பே முஸ்லிம் மதத்திற்கு மாறினேன். சிலவற்றை மறக்க நினைத்தேன். என் வாழ்க்கை முறையை மாற்ற நினைத்தேன். அப்படித்தான் என் பெயரையும் மாற்றினேன்.

எனக்கு முதலில் இருந்தபெயர் திலீப் குமார். என்னுடைய திலீப் குமார் என்ற பெயரை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. உண்மையில் அதனை முழுமையாக வெறுத்தேன். வேறு ஒரு மனிதராக மாற நினைத்தேன்.

பெயரை மாற்றினேன். புது மனிதராகவும் பொழிவு பெற்றேன். பழைய விஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.A-r-rahman-with-Krishna-Trilok

ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை சுயசரிதையை கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ளார். தன்னுடைய இளமைக்கால கஷ்டம், வெறுமை, தந்தையின் இறப்பு, இசை மீதான அவரின் காதல் உள்ளிட்ட பல விஷயங்கனை ஏ.ஆர்.ரஹ்மான் இதில் மனம் திறந்து பேசியுள்ளார்.