ஹஜ் பயணம்-பிரதமருக்கு முதல்வர் கடிதம்

495

தமிழகத்திற்கான ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறிப்பிட்டுள்ளது,

இந்தாண்டு தமிழகத்தில் ஹஜ் பயணத்திற்காக 6379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன ஆனால், 3542 இடங்களே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் கூடுதலாக இன்னும் 1500 இடங்களை ஒதுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்றே, கடந்தாண்டும் ஹஜ் பயணத்திற்காக 3542 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியது ஆனால், தமிழக அரசின் விலியுறுத்தலின் பேரில் 3816 ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of