10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களே.. தயாராகுங்கள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிட்டாச்சு..!

947

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

இதே போல், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி முடிவடைகிறது.

12 ஆம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு காலையிலும், 11 ஆம் வகுப்புகளுக்கு மதியமும் அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 13ம் தேதி மொழிப்பாடம், 16ம் தேதி ஆங்கிலம், 17 ம் தேதி மற்ற மொழிப்பாடம் நடைபெறுகிறது. டிசம்பர் 18ம் தேதி கணிதம், 20ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் பாடங்கள் நடைபெறுகிறது.

11 ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையிலும், 12 ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரையிலும் நடைபெறுகிறது.