வெற்றியோடு விடைபெற்ற கேப்டன் மசகட்சா | Hamilton Masakadza

745

வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிடையே தற்போது முத்தரப்பு டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணி கேப்டன் மசகட்சா தெரிவித்திருந்தார். ஜிம்பாப்வே நேற்று தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மசகட்சா, 42 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களடன் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

retirement

இவரது அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணிக்கான தனது கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிதோடு, அணியை வெற்றி பெற வைத்து மகிழ்ச்சியோடு வெளியேறினார் மசகட்சா.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of