கைகள் இல்லாமல் கையெழுத்து போட்டியில் சாகசம் செய்த சிறுமி

289

அமெரிக்காவில் தேசிய அளவில் நடைபெற்ற கையெழுத்து போட்டியில் கலந்துகொண்ட கைகள் இல்லாத 10 வயது சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.

கையெழுத்துப் போட்டிகளில் கைகளில் எழுதி வெற்றி பெறுவது வழக்கமான செய்தி தான். கைகள் இல்லாமல் பிறந்த சிறுமி, எந்த செயற்கை கருவிகளையும் பொருத்தாமல் சிறந்த கையெழுத்திற்கான விருதை பெற முடியுமா..? முடியும் என்று நிரூபித்துள்ளார் சாரா.

handwriting-

ஆம்… சாரா ஹினஸ்லே என்ற 10 வயது சிறுமி அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள செயிண்ட் ஜான் ரீஜினல் பள்ளியில் 3-வது கிரேடு படித்து வருகிறார். பிறக்கும் போதே சாராவிற்கு கைகள் இல்லை.

அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காத சாரா, எல்லோரையும் போல அவர் எழுதுவார், வரைவார். இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் கலந்து கொண்ட சாராவிற்கு சிறந்த கையெழுத்திற்கான நிகோலஸ் மாக்ஸிம் விருது வழங்கப்பட உள்ளது.

 

ஆண்டுதோறும் 2 மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த விருது பெறுபவர்களில் சாராவும் ஒருவர். வரும் ஜூன் மாதம் நடக்கும் விருது வழங்கும் விழாவில் அவருக்கு ட்ராபி வழங்கப்படும். மேலும் அவருக்கு 500 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.35,000 பரிசாக வழங்கப்படும்.

அவரின் தோள்களுக்கு இடையில் பென்சிலை வைத்து, எழுத்துக்களின் வடிவம் மீது கவனம் செலுத்தி எழுதுவதாகவும், தன்னை பொறுத்தவரை எழுதுவது என்பது கலைப்படைப்புகளை உருவாக்குவது போன்றது என்றும் சாரா தெரிவித்துள்ளார்.

handwriting

சாரா ஒரு போதும் செயற்கை கைகளை பயன்படுத்தவில்லை என்றும், சாராவின் சில வேலைகளுக்கு உதவியாக கருவிகளை பொருத்திக்கொள்ள கூறிய போது அவர் அதனை மறுத்துவிட்டதாகவும் அவரது தாய் கூறினார்.

மேலும் தன்னுடைய சுயசிந்தனையால் தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்று சாரா நம்புவதாகவும் அவரது தாய் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of