“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi

368

மாய உலகம்.. இது சினிமா உலகிற்கு கொடுக்கப்பட்டுள்ள புனைப்பெயர், அவ்வளவு எளிதில் யாருக்கும் தன் கதவுகளை இந்த உலகம் திறப்பதில்லை. இந்த கதவை தடித்திறந்தவர் உண்டு, அதேசமயம் முட்டித்திறந்தவரும் உண்டு. அப்படி இந்த சினிமா துரையின் கதவுகளை முட்டித்திறந்த பல நடிகர்களில் ஒருவர் தான் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை தன் பாணிக்கு மாற்றி, தன் நடிப்பால் ரசிகர்களை ஆர்ப்பரிக்கவைக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

poster-2

16 ஜனவரி 1978ம் ஆண்டு ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி. நடிக்கும் ஆர்வத்தில் பல சினிமா கம்பெனிகள் ஏறி இறங்கி நொந்துபோன விஜய் சேதுபதி சில சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு சினிமாத்துறையில் இருந்து விலகினார். குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு சென்று வேலைபார்த்தார், ஆயினும் சினிமா கனவு துரத்தவே மீண்டும் சினிமாவில் இணைந்தார், எம். குமரன், புதுப்பேட்டை, லீ, வென்னிலா கபடிக்குழு, வர்ணம், சுந்தரபாண்டியன் என்று பல படங்களில் சின்னச்சிறு வேடங்களில் தோன்ற கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ என்ற படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக உருவெடுத்தார்.

அதன் பிறகு நடந்து எல்லாம் சரித்திரமே. புஷ்கர், காயத்திரி இணைத்து இயக்கிய படம் ‘வ குவாட்டர் கட்டிங்’ 2010ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு ஆடிஷனுக்கு வந்த விஜய்சேதுபதி வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறினார். அதே புஷ்கர், காயத்திரி மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து ‘விக்ரம் வேதா’ என்ற படத்தை இயக்க, அதில் அதிரவைக்கும் வில்லனாக களமிறங்கினர் விஜய் சேதுபதி. ஏழு ஆண்டுகளில் ஒரு தனிமனிதனின் உழைப்பு அவனை எவ்வளவு பெரிய உயரத்திற்கு எடுத்து சென்றது என்பதற்கு இதுவே சான்று.

poster-1

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 42வது பிறந்த நாள் இன்று. அவர் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of