மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்- தலைவர்கள் வாழ்த்து..!

231

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி ராகுல்கந்தி ட்விட்டரில் தனது வாழ்த்தினை பதிவிட்டார். கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் தனது வாழ்த்தினை தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்திதது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement