இந்தியர்கள் அனைவருக்கும் 2021-ல் குட் நியூஸ்

3892

உலகம் முழுவதும் பெருந்தொற்று பரவல் நீடித்துவரும் நிலையில் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷ்யா கண்டுபிடித்த ஒரு தடுப்பூசி அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டுவந்தபோதிலும், சர்வதேச அளவில் பயன்பாட்டில் இல்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து நம்பத்தகுந்த தகவல் வெளியாகியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பெருந்தொற்று தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement