பெண்ணை படுக்கை அறைக்கு அழைத்த காவல் ஆய்வாளர்

972

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்திய ஆந்திர காவல் ஆய்வாளர் தேஜோ மூர்த்தி தலைமறைவாகியுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வாயல்பாடு சரக காவல் ஆய்வளராக உள்ளவர் தேஜோ மூர்த்தி. இந்நிலையில் பீலேறுவை சேர்ந்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய ஆய்வாளர் தேஜோ மூர்த்தி, தொடர்ந்து அவரிடம் தறவாக பேசியுள்ளார். நள்ளிரவில் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரமோற்சவ பாதுகாப்பு பணிக்காக திருப்பதிக்கு வந்த காவல் ஆய்வாளர் தேஜோ மூர்த்தி, அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் ஆய்வாளரின் லீலைகளை வெளிப்படுத்த வாட்ஸ்-அப் மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன், மகளிர் அமைப்பினருடன் திருமலைக்கு சென்றுள்ளார்.

இதனை அறிந்த காவல் ஆய்வாளர் தேஜோ மூர்த்தி பாதுகாப்பு பணியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து அம்மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement