சிலம்பம் சுற்றி பட்டைய கிளப்பிய ஹர்பஜன்! வைரலாகும் மாஸ் வீடியோ!

327

12-வது ஐ.பி.எல் டி-20 லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன.

இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்ட பயிற்சியில் சி.எஸ்.கே வீரர்கள் ஈடுபட்டனர். வீரர்கள் சிலம்பம் சுற்று வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

அனைத்து வீரர்களும் ஒரு கையால் சிலம்பம் சுற்றவே சிரமப்பட்ட நிலையில், மூத்த வீரர் ஹர்பஜன் சிங், வேட்டி கட்டிக்கொண்டு தனது இரு கையாலும் சிலம்பாட்டம் ஆடினார். அவரின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of