சென்னை போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய ஹர்பஜன்..! இப்படி ஒரு பிரச்சனையா..?

726

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்ஜன் சிங். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், கடந்த 2015-ஆம் ஆண்டு, சென்னையை சேர்ந்த தொழிலபதிபர் மகேஷ், என்னிடம் 4 கோடி கடன் வாங்கினார். அதன் பிறகு, அவரை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு இருக்க, கடந்த ஆகஸ்டு மாதம் 18-ஆம் தேதி அன்று, 25 லட்சம் ரூபாய்க்கு செக் ஒன்றை அளித்தார்.

ஆனால், அதுவும் வங்கிக்கு சென்றதும், பவுன்ஸ் ஆகிவிட்டது. எனவே, எனது பணத்தை திரும்ப காவல்துறை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்.

இதனால், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் மகேஷ். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

Advertisement