அடுத்தடுத்து பலத்தை இழக்கும் CSK..! இன்னொரு முக்கிய நபர் விலகல்..!

1171

ஐ.பி.எல் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றனர்.

அப்போது, வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, தோனி உள்ளிட்ட முக்கிய விளையாட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில், ஒரு பவுலர் உட்பட நிர்வாக பணியாளர்கள் சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

இதையடுத்து, சுரேஷ் ரெய்னா, தனது குடும்ப பிரச்சனையின் காரணமாக, இந்தியாவிற்கு திரும்பிவிட்டார். இவ்வாறு இருக்க, திடீரென ஹர்பஜன் சிங்கும் விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.

சொந்த பிரச்சனையின் காரணமாக, இந்த தொடர் முழுவதும் ஹர்பஜன் சிங் விளையாட மாட்டாராம். அடுத்தடுத்து முக்கிய விளையாட்டு வீரர்கள் விலகி வருவதால், சி.எஸ்.கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.