“ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா…உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே”

791

கஜா புயலில் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, டெல்டா மாவட்டங்களே பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்துள்ளார்.

அதில்“ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம். முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of