சந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh

485

சந்தானம், சூப்பர் ஸ்டார் முதல் விஜய், அஜித் வரை அனைவருடனும் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்த காமெடியன். தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடியது. சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

கார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

Advertisement