இனி எல்லாம் ஓவர்.. CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்..

1917

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பவர் ஹர்பஜன் சிங். சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த 3 ஆண்டுகளாக சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால், முந்தைய ஆண்டு நடைபெற்ற போட்டியில், தனிப்பட்ட காரணங்களுக்காக, விளையாடவில்லை. இந்நிலையில், ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அழகான நினைவுகள், சிறந்த நண்பர்கள் என எப்போதுமே நினைவில் வைத்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை 21-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்த நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கே விலகியுள்ளார்.

Advertisement