“எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவே..” – ஹர்பஜன் சிங் அதிரடி டுவீட்..!

1253

எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவே… என்று  ஹர்பஜன் சிங் அதிரடியான டுவீட் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. ஏலத்துக்கு முன் 8 அணிகளும் தங்கள் வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.

வீரர்களை விடுவித்துக் கொள்ளலாம். இதைத்தொடர்ந்து அணியிலிருந்து விடுவிக்கப்படும் 5 வீரர்களின் பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று வெளியிட்டது. அதில் சைதன்யா பிஷ்நோய், சாம் பில்லிங்ஸ், துருவ் சோரே, டேவிட் வில்லே, மோகித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதனால் இந்தாண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் தொடர்வது உறுதியாகி உள்ளது. இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், ‘வணக்கம் டா மாப்ள! #CSK டீம் ல இருந்து இந்த ரிட்டென்ஷன் என்னாலயா. இல்ல உங்கனாலயா. தமிழூ..எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவுல @ChennaiIPL ஒரு “எல்டோரா”.

என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு. இந்த @IPL Retentionல ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன்.CSK #IPL2020′ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of