பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு இடைக்கால தடை

134

பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோகர் நடத்தும் ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் இருவரும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியின் போது அவர்கள் இருவரும் பெண்கள் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்துள்ளனர்.இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்ததையடுத்து, இருவர் மீதான விசாரணை முடியும் வரை அவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட பிசிசிஐ காலவரையற்ற தடை விதித்தது.

இந்நிலையில், அந்த புகாரை விசாரிப்பதற்கான நடுவர் நியமிப்பதில் காலம் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டு, ராகுல் இந்திய ஏ அணிக்காகவும், பாண்டியா நியூசிலாந்து தொடரிலும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் காவல் துறையினர் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீது, பெண்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோகர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது நியூசிலாந்து தொடரில் ஆடிவரும் பாண்டியா இரண்டு ஒருநாள் போட்டிகளில் 61 ரன்கள் மற்றும் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இன்று தொடங்கும் டி20 தொடரிலும் அவர் விளையாடி வரும் நிலையில் இந்த நடவடிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.