பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து! ஹர்திக் பாண்டியாவுக்கு 20 லட்சம் அபராதம்!

393

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

அதேசமயம், பாண்டியா, ராகுல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய அதிகாரி டி.கே.ஜெயின், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இரண்டு வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மீதி ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அபராத தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிசிசிஐ பிடித்தம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of