“ப்பா இவ்வளவு பாராட்டா”? இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல! ஹரிஷ் கல்யான்!

730

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் ஹரீஷ் கல்யாண், பியார் பிரேமா காதல் படம் மூலம் தமிழில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.

இந்நிலையில் நானி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ஜெர்சி தெலுங்குப் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தைப் பார்த்த பலரும், ஹரீஷின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும், விமர்சனங்களிலும் அவர் நடித்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதனால் ஹரீஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

“இது முற்றிலும் நானே எதிர்பாராதது, என் கதாபாத்திரத்தை கவனித்து, இந்த அளவிற்கு என்னை பாராட்டுவார்கள் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை.

தெலுங்கு ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

என ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of