விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு..! மத்திய அமைச்சர் ராஜினாமா..!

640

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது.

விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உள்ளிட்ட விவசாயிகள் தொடர்பாக 3 மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த மசோதாக்கள் விவசாய வளர்ச்சிக்கு ஆபத்தானவை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.இதேபோல், பாஜகவின் கூட்டணி கட்சியாக சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மக்களவை உறுப்பினரும், மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இதனை ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.