காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை – உடலில் பாய்ந்த 10 க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள்

301

ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விகாஸ் சவுத்ரி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஹரியான மாநிலம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி டெல்லி அருகே அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரால் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விகாஸ் சவுத்ரியின் உடலில் 10 க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஃபரிதாபாத்தில் உள்ள ஜிம்மிலிருந்து வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் மாநில அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இங்கு சட்டத்திற்கு பயமில்லை. நேற்று இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கு பாலியல் வன்கொடுமையை எதிர்த்த ஒரு பெண் குத்தப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் முறையான விசாரணை தேவை என்று அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of