பபுள் கம் விற்பனைக்கு தடை விதித்த ஹரியாணா..! ஏன் தெரியுமா..?

446

உலக அளவில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயினை தடுப்பதற்கு இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பபுள் கம் போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு ஹரியாணா அரசு 3 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது.

இதுபோன்ற பொருட்களை மென்றுவிட்டு துப்புவதன் மூலம், கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை ஹரியாணாவில் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of