ஹரியானாவில் வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் பிளவு

430

ஹரியானாவில் வாரிசு சண்டையால் இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கட்சி தொடங்கப் போவதாக அஜய் சிங் சவுதாலா அறிவித்துள்ளார்.

இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், ஹரியானா முன்னாள் முதலமைச்சருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.

அவரது மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா கட்சியை நிர்வகித்து வருகிறார்.

ஆனால் அவருடைய தலைமையை அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களும் எதிர்த்து வந்தனர். இதனால் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையில் இருந்தபடியே அஜய் சிங் சவுதாலாவின் 2 மகன்களையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அஜய் சிங் சவுதாலா, தனது மகன்களுக்கு ஆதரவு தெரிவித்தால், அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய கட்சியை தொடங்கப் போவதாக அஜய் சிங் சவுதாலா அறிவித்துள்ளார்.