டிவிட்டரில் டிரெண்டாகியுள்ள #Torch Light

291

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டார்ச் லைட் ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது.இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்று தேர்தல் ஆணையம் ‘டார்ச்லைட்’சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டார்ச் லைட் ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. இதற்கு ஆதரவாகவும் அதனை கலாய்த்தும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of