10-ஆம் வகுப்பு தேர்வு உண்டா? ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? யாருகெல்லாம் 1000.ரூ நிதி – முதல்வரின் பதில்கள்

422

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் சந்தித்த முதல்வர் கூறியதாவது, கொரோனா நிவாரண தொகையாக ரூ 1000 வழங்கப்பட்டுள்ளது. 12 நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் கொரோனா இருப்பதை மறைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கலாம். பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம்.

மேலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியம். பொதுத்தேர்வு எப்போது என்று பின்பு அலோசித்து முடிவேடுக்கப்படும். பொதுத்தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு முக்கியமான ஒன்று எனவே இந்த தேர்வு முக்கியமான ஒன்று.

மேலும் சென்னையில் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of